Kathiravan
- Mast Culture

- Jul 10, 2025
- 6 min read
By Kathiravan.R
திருக்குறளின் மாண்பு
எல்லா சமயத்தார்க்கும் பொதுவான
கருத்துக்களைக்
அறநெறி நூலே இது.....!
தமிழின் பிரசம் கலந்த
முத்திக்கனியை விட
சிறந்தது முப்பால்
என்னும் தந்தைப் பால்...!
வாழ்க்கை நெறிகளையும் ,
ஒழுக்கவியலையும் மக்களுக்குக்
காட்டும் கண்ணாடி....!
உயர்ந்த அறத்தைக் கொண்ட
இந்த இரண்டி வெண்பாவை
எவ்விடவும் ஓப்பிடத்தக்கது
அன்றோ..!
மகத்தான வழிகளில்
மனிதர்களைச் செலுத்தும்
இந்த அறநெறி நூலைப்
படித்துக் கால வெள்ளத்தால்
அழியாத நூலே ...!
இது....!
அறிவியல் ஆத்திச்சூடி
அன்புடன் பழகு
ஆரிக்கணம் நிதானம் கொள்
இன்னலுக்கு நன்செய்
ஈதலில் சிகரமாய் நில்
ஐயம் கொள்ளாதே
உடனுக்கு உடன் செயல்களை
ஊசிப் போல் செயல்படு
என்றும் வெற்றிக் கொள்
ஏங்கி நிற்காதே
ஒய்வில் தவறுகளை
நினைத்துப் பார்
ஓவு பழகு
ஔடதம் என்னும்
வாழ்க்கையில்
மீள….!!!!
Accenture ( Daughter of Amutha)
தேன் வழியும் மலரின்
முகமே அழகு
தென்னாட்டில் பாயும்
ஆறுகளின் பிறப்பிடம்
நின்னைக் காதல் ஆவல்
ஏராளம்
ஆனால்
தடுக்கிறது என் மனது ஏன்
என்று தெரியவில்லை
ஆயிரம் மனிதர்கள் என்
சூரிய ஒளி கண்ணில் பட
நீ நிலவாக அணிந்து இருந்தாய்…!
யாது அறிவது புரியமால்
தவிததேன்
சில நிமிடங்களில்…..
கன்னித் தமிழ்நாடு
பெற்றெடுத்த
புதல்வியே …..
வருவாயோ என்னிடம்
உண்ர்ச்சியில் கலந்திட…!
செந்தமிழின் புதல்வியே
காதல் கொள்ளத் தூண்டும் பாவையே
நின்னின் குரல் யாழ் இனிது
விட இனிது
தெரியாத முகங்கள் பரிமாறிக்
கொள்ளும் வார்த்தைகள்
விந்தையாக மாறுகிதே
தோன்றுவாள் மாதோ
என் கண்முன்னால்…!
தோன்றலின் தோன்றல்
உனை அழகை
வர்ணிக்க கம்பனின்
வார்த்தைகளும் தடுமாறி
நிற்கிறதே…!
பொழியும் மழையில்
உதித்த வெண்ணிலா
நீ….!
வர்ணனையின் உச்சி இவள்
பொன்நிலவு வெள்ளிச்சிலையே...!
காலந்தோறும் எங்கும்
மணக்கும் மடப்பிடியே...!
தோன்றி மறையும் வானவில்
அழகின் கொடிமுல்லை
மலர்களின் நறுமணம்
கமழும் சந்தன மகளே...!
பண்ணிசைப் பாடலின்
முகவரியே உனை
நினைத்தால் போதும்
புதுமைகள் மலரும்
பூமிச் செழிக்கும்...!
உனது அன்புக்கவிதைகளின்
வரிகள் கண்ணதாசனின்
தென்றலில் தோன்றிட
விரும்பும் நன்செய்
நிலம் பெற்றெடுத்த
தாயுள்ளம் கொண்டவளே.....!
பூமியில் மழையாக
பொழிவாயா வேளாண்மைச்
செழிக்கப் புன்னகைக்
கன்னியே......!
My favourite lovable quotes(vintage Kathiravan)
அதிக்காலையில் உதிக்கும் சூரியனின்
வெளிச்சத்தில் மறையும்
நிலவாகிறேன் நான்..!
காதலின் முடிவில் தான் கவிதைத்
தொடங்குகிறது….!
காதலின் முறைகள்
காதலைச் சொல்ல காலம்
தேவையில்லை ஒரு கணம் போதும்”
“தப்பு இருந்தாலும்
தெளிவாகக் கண்ணைப்
பார்த்துச் சொல்”
“காதல் என்று சொல்வதை மறுத்து
“❤️”அன்பு என்றுச் சொல்”
“வாழ்வு ஒளிர இருள் நீங்க
*இருவரின் மனமும்
இல்வாழ்வில்
நிலைக்க”……!
அவள் இதழின் சிவப்புச்
சாயத்தில் சொல்லாமல்
சொல்லும் அன்புப் பறிமாறுதல்...!
பார்க்க வேண்டும்
இவளின் அழகை
கண்ணிமைக்காமல்
சாகும் வரை....!
திருவாரூர் சிறப்பை
என்னவென்றுச் சொல்ல...!
உலக புகழ்பெற்ற
திருவாரூர் தேரே
முதன்மையைக்
காட்டுகிறதே
அதைச் சொல்லவா...!
அல்ல
வள்ளுவர் கோட்டத்தின்
முன்னோடி என்றுச்
சொல்லவா....!
பிழையின்றி தொழிற்புரியும்
இன்சொல்
மக்களின் அன்பார்ந்த
சொற்களைச்
சொல்லவா...!
வறுமையிலும்
செம்மையாக வாழும்
மாண்பைச் சொல்லவா...!
கட்டுக்குள் அடங்காத
தென்றல் வீசுவதே
சொல்லவா...!
பற்றி அறியது
அவ்வூரின் சிறப்புப்
அதன் அணித்து
கிடந்திருக்கிறேன்
புதரில் தூவிய
விதைப் போல்...!
திருவாருரில் மாவட்டத்தில்
நான் கண்டுக் களித்த
சில உண்மை
நிகழ்வுகள்
வாழ்க்கை அறங்கள்
அன்பின் சிரிப்பில்
இறைவனைக் கண்டு
மகிழுங்கள்”
“தனது ஆசைகளை
நிறைவேற்றத்
காலம் தடையில்லை”
“சுடரில் எரியும்
திரிப்போல
சிறிது சிறிதாகக்
கடுகதி வாழ்கிறேன்
நான்”
பிடித்தக் கவிதைகள்
வையம் நின்றாலும்
எந்தன் வாழ்விற்கு
நீயே முகவரி...!
கவிதையின் ஊற்றாய்
இருக்கும் உன்னை
என்னவென்று வர்ணிப்பேன்...!
எந்தன் இன்னொரு பக்கம்
உன்னால் தோன்றியது
சூரிய ஒளிப் பட்ட
செடிகள் போல...!
எந்தன் மூச்சுக்காற்றில்
கலந்தாய் உயிராய்
மலர்ந்தாய்....!
அன்பு என்ற வார்த்தைக்கு
இலக்கணமாய் திகழ்கிறாய்
முன்னே தோன்றிய
தமிழ்க்கன்னிப் போல
இளமையில் நினைகிறாய்..!
பார்க்கமல் சென்ற
உன்னை மெல்ல மெல்லப்
பிடித்தது எதனால்
நீ அறிவாயோ...!
இன்னிசைத் தமிழே...!
என்றும் நின்னுடன் நான்.
புதுவருடம் பிறந்த நாளில்
என் காதல் கவிதைகளை
என்னவளுக்குச்
சமர்ப்பிக்கிறேன்”
எட்டியத் தூரத்தில்
இருந்தும் காணாமல்
இருக்கும் இனிமைத்
தேனே”
மழையின்றிப்
பொய்த்த
புன்செய்
நிலம் போல
நாடுகிறேன்
உன்னைக்
காணாமல்.,...!
இதயத்தில் மலர்ந்த காதல்
வெற்றிடமாய் இருந்த
இதயத்தில் மலர்ந்த
அத்திப்பூ தேனே...!
எந்தன் மூச்சுக்காற்றில்
கலந்து விட்டுக் காக்க
வைக்கும்பெண்ணே...!
தோற்றத்தின் அழகு
பொய்யடி….!
அன்புநெறி நிறைந்தப்
மனிதனின் அழகு
மிகையாகாது எவ்விதத்திலும்
கார்மேகமே...!
புகைப்படத்தில் மலர்ந்தத்
தாமரையே உன்னைக்
அழியாமல் காக்கும்
திரளானவன் நானடி....!
கானல் நீர் போல் ஒளிரும்
இடையளே நின்னைக்
கண்டதும் மனத்தில்
பதிய வைத்து கவிதைகள்
வடித்தேன் புதிதாக ...!
எந்தன் வாழ்விற்கு இடம்
கொடுக்க வருவாயோ..!
மருத நிலத்தின் பெண்ணே..!
செயலற்றுக் கிடந்த உடல்
உன்னால் உயிர்ப்பெற்றது
எழுந்தது...!
அன்பைச் செழிக்க
வைத்ததுப்
பூமியில்....!
நற்றமிழ் வல்ல குரல்
காதல் கொள்ளத்
தூண்டும் பாவையே
நின்னின் குரல்
யாழ் இனிது
விட இனிது
தெரியாத முகங்கள்
பரிமாறிக்
கொள்ளும் வார்த்தைகள்
விந்தையாக மாறுகிதே
தோன்றுவாள் மாதோ
என் கண்முன்னால்….!
“கவிதைக்கு அழகு கற்பனை
காதலுக்கு அழகு கண்கள்
அதுவே காதலின் ஊற்று”
எந்தன் உயிரே
என்னுள் எப்படி நுழைந்தாயடி
நெஞ்சில் உயிராய் கலந்தாயடி
நாட்டுக்கு பெருமைச் சேர்ந்தாயடி
காதலின் உண்மை உணர்ந்தேனடி
எந்தன் உயிர் நாடி நீயடி”...!
தலைவியின் சிறப்பு
கற்புக்குச் செங்கோல் நீயானாய்
தலைவன் மனத்தில் குடிருந்தாய்
வாழ்வு எல்லாம் உந்தன் நினைவு
கண் விழித்தால் உந்தன் தோற்றம்
எந்தன் ரசனை உள்ளம் ஏங்கியது
நின்னால்.....!
அழியா வனப்பு
ஆயிரம் கவிதைகள்
எழகிறதே காதலியே….!
கார்முகில் அவளைக்
கண்டு கண்
சிலிர்க்க…!
மாலையில் பூக்கும்
தாவரங்கள்
உன்னைக் வெட்கப்பட
உந்தன் பாதத்தை
என் கண்ணிமைக்களால்
தாங்க….!
புதிய உலகத்தை
கண்டேன்
உன்னால்...!
காதலியே….!
“பெண்ணே உன்னிடம்
நான் கொண்ட காதல்
அளவற்றது எந்தன்
தேவதையே….!
“மீண்டும் என்னுள் கவிதை
வரிகளை விதைத்தவளே”…!
எந்தன் இல்லறத்திற்கு
வெளிச்சாடை அளிப்பாயாக..!
எந்தன் வாழ்வில் மலருவாயா
என் அன்புக் காதலியே
கடந்து வந்த ஞாபகங்களை
எழுதித் தீர்க்க முடியாத
நினைவாக…!!
உள்ளத்தில் இடம் பிடித்த
நீ என் கவிதை சுனையில்
கலந்திட வருவாயா….!
கோலமயிலாடும் அழகியே….!
காலையில் உதிக்கும் சூரியனின்
ஒளி கண்ணிற் படும் முன்
கைப்பேசியில் நின்னைக்
கண்டு ரசித்தேனடி...!
இரவுத் தூக்கத்தைக் கலக்கும்
மாயக்காரியே என்றும்
நின்னை நினைத்து வாடும்
பாலைவனக்
காதலனானேடி...!
பார்க்க வேண்டும் இவளின்
வெண்முகப் பசலைக்
கன்று மேனியைக்
கொண்ட பாவையே...!
தான் கண்டத் தோல்விக்கு
முற்றுப்புள்ளி தன் வாழ்வு
மேன்மை அடைய
இணைந்து இனிமைத்
தருவாயா...!
நம் தாய் நாட்டில்
எங்கும் வீசும்
இளந்தென்றலே...!
வாழ்க்கையின் கற்பனைக் கவிதை
(தலைவிப் பற்றிய சில வரிகள்)
பூஞ்சோலைப்
பூமியில் தென்றல்
உயிர்வளியோடு
வருகையில் அவள்
இடையில் கமழும்
நறுமணத்தில்
வாழ்ந்தேனே...!
தமிழினம் காக்கும்
கங்கையே உந்தன்
நெற்றியில் குங்குமம்
இட்டு முத்தமிட
வேண்டும்
ஒர் நாழிகை
வாழ்த்திடவே...!
பாரதியும் தமிழும்
ஊழிலிருந்து கடந்து
காலத்தால் அழியாத
நூலான தமிழே...!
முந்தை மொழிக்கொல்லாம்
முத்தவளே.....!
இயக்கக் கவிஞர்
பாரதியார் செந்தமிழின்
புகழைப் எட்டுத்திக்கும்
தன் சிந்தனை ஊற்றல்
பரப்பினார்....!
வசனக் கவிதைகளைப்
பரப்பிய முண்டாசுக்
கவிஞரின் எழுத்துக்களை
என்றும் நிலை நிறுத்து
படித்து சுவைத்துப்
பார்போம் வாருங்கள்...!
ஓடோடி வாருங்கள்....!
கண்டவுடன் கவிதையில் முழ்கினேன்
தீப்பிழம்பாய் உருகி
அனைவரிடமும்
அன்புள்ளம் கொண்டவளே
யாதேனும்
கண்டோம் நின்னிடத்தில்
பற்றற்றுக் கிடந்த மரம்
துளிர்ந்த்து போல்...!
ஞாலம் சுற்றுவது
நின்றாலும்
உந்தன் வெண்ணிறத் தேகப்
பாதத்தைப் பற்றுக் கொண்டு
உயிர்கள் வாழும் நாடெங்கும்
செழுமை ஓங்கும் ரத்தின
மணியானவளே...!
மறைக்கமுடியாத நினைவுகள்
காற்றில் கலந்து வரும்
தேன் மணத்திற்கு தமிழ்மரபில்
சுவாசம் உண்டு...!
நின்னை நினைத்துக் கவிதை
எழுதுகையில் இந்த வையம்
புகழ சொற்களை எடுக்க
மனமில்லை...!
அவைகள் எல்லாம்
உந்தன் தேகத்தில்
வரிகளாய் மிளர்குறதே
யான் செய்வன் நான் ...!
கவிஞன் எழுத்திற்கு
இடமில்லை அவளிடம்
உயிரில் கலந்திட
காதலும் இல்லை
காலம் கடந்துவிட்டதே...!
ஐயனே...!
காதல் சொல்லும் கண்கள்
கவிதைச் சொல்லும் விழிகள்
கற்கண்டு சுவைக் கொண்ட
கன்னங்கள்….!
கானகம் நிறக் கொண்ட மயிரிழை
காற்றில் அசைந்தாடும் கூந்தல்கள்
காது மடல்களில் ஒளிரும் பளிங்குகள்
கவர்ந்து ஈர்க்கும் அழகிய
மெய்கள் ….!
கதிரொளிக் குவியும் உள்ளங்கைகள்
கட்டுத்தேக வளைந்த மெல்லிடைகள்
கவின்மிகு முத்தமிட தோன்றும்
கழுத்துகள்….?
கடலலை வீசும்
மெல்லிடைகள் கொண்ட
உள்ளத்தில் மீண்டும்
எப்படித்தான் அன்புக்
கொள்ளுவனோ...!
உயிரில் கலந்த இன்னிசையே...!
தொழிலதிபர் பற்றிய ஒரு பார்வை
வளரும் நாடுகளின் முகவரே
சின்னக் குழந்தைகளின் தகப்பனே
ஏழை மக்களின் செல்வமே….!
வாயில் நுழைய ஆயிரம் ஆசை
கணக்கிலடங்கா வேலைகள்
கொண்டவனே….!
நாட்டின் பொருளாதாரச் சின்னமே
உன் கைகள் ஒங்கினால் நாடும்
வளருமே....!
தொழில் வளம் பெருகுமே
பணங்களின் முகமானவனே
உன்னை யாதென வினாவுவேன்
உடலின் உயிர்நாடியே….!
இனியப் பாதைகள்
இளமையில் சிறகடிப்போம்
மாலையில் சுற்றித்திரிவோம்
கல்லூரியில் காதல்
செய்வோம்
உலகத்தை வென்றிட தமிழால்
ஆள்வோம்
பற்றுக்கொள்ள நேசம்
கொல்வோம்
தாய்தந்தை இணைந்து
இனிமை
வாழ்வை வாழ்வோமே....!
Nationallevelcompetition
(இயற்கை ஓவியம்)
நீல நிற வானத்தை
பச்சை நிற நெற்பயிர்கள்
கண் சிமிட்டி அழைக்க
இயற்கை எழிலை ரசித்து
மயில்களாட
இன்னிசை புல்லாங்குழல்
ஒலிக்க
பூமியில் வாழ
விரும்புகிறாயோ...!
Daughter of Amutha (Accenture)
கண்ட பெண்ணின்
தமிழ்த்தென்றல் வீசும்
மாலைப்போதிலே
முகம் திருப இன்னுயிர்
அவளை நாடியது
என்னை அறியாமலே
அன்பு என்னும் உணர்வு
தன் மனத்தில் ஏழ
ஓவ்வொரு நாளும்
அவளின் ஞாபகங்கள்
காட்டாறுப் போல
நெஞ்சில் ஓடியது ....!
திருமண நிகழ்ச்சியில்
என் எதிரே தோன்றிய
அவள்
வாழ்க்கையில்
கானல் நீரானாள்...!
தேனமுது(Daughter of Amutha)
கண்வுடன் பிடித்தது
அழிகியப் புள்ளி மானே..!
பூவில் வீசும் நறுமணம்
உன்னைக் வருடித்
தான் போகிறது....!
இதயத்தில் இருந்து
நீங்காதப் பெண்ணே
யான் செய்வேன்
உனை மறக்க
பைங்கிளியே…!
Accenture (daughter of Amutha)
தென்றல் வீசும் காற்றில்
கலந்திட வேண்டும்
என்று சொல்வதை
மறுத்து விட்டார்....!
தலைவன் தரும்
முத்தம் புத்தகம்
இல்லாக் கவிதை
நினைக்கும் போது எந்தன்
இதயத்தில் மலருகிறாய்...!
இரவின் நேரம் நீளுகிறதே
பகல் நேரம் விரைந்து ஓட
மாலைப்பொழுதில் மலரும்
வெண் நிலா நீயடி.....!”
நன்செய் நிலம் காற்றே
பசுமைச் செழிக்க
உள்ளம் சிலிர்க்க
வான் உயர்ந்த
கார்மேகத்தால் வீசும்
நறுமணம் கமழும்
காற்றே...!
கழனியில் நெற் பயிர்கள்
அசைந்தாட
காஞ்சிப் பூக்கள் எங்கும்
தோன்றிட
பொய்மையும் மெய்யாக
திகழும் ஊர்
எங்கள் ஊரே....!
அன்பின் ஒப்பனை அவள்(ACC-DFA)
காலம் கடந்து
நினைக்கிறேன்
மழைத்துளியாக...!
இவள் யாரோ என்று
நினைத்தேன் முடிவில்
தான் தெரிந்தது என்
கவிதை வரிகள் இவளது
என்று.....!
முத்தமிழ்க் கனியே...!
உன்னைக் கண்டால்
பூக்களும் வெட்கம்
கொள்கிறதே
யாரடி நீ....!
மாய தாமரையே….!
மலர்ந்தக் கனிகள்(Accenture-DOA)
பூக்களும் ஆடையாக
மாறும்....!
தவணியும் நூலாடையாக
மாறும்....!
அன்பும் விழிகளில் மலரும்
நீர் திவலைகளும்
கானல் நீராகும்...!
தென்றல் பாடும்
மெல்லிசை கவியாக
மாறும்...!
சோலைகள் எங்கும்
உந்தன் நறுமணம் கமழும்....!
சங்கிதமே நின்
குரலிருந்து
பிறந்ததோ....!
செந்தமிழ் மகளே....!
(ADF) காதலின் கள்வன்
காலத்திற்கு முன்பே
தோன்றிய
தமிழ் மரபில் வந்த
புலவர்கள் எச்சங்கள்
நாங்களே...!
குளிர்ந்த நின்
உள்ளத்தில் இடம்
தருவாயா உன்
கள்வனுக்கு
மனத்தைத் திருடிய
பைங்கிளியே...!
மழைச்சாரல்
வெண்ணிலவில் இருந்தச்
சாரல் தண்மனம்
வீசாதோ....!
காய்ந்த மரத்தின்
சுள்ளிகளைப் போல்
காயும் மனத்தில்
மழைச்சாரல் வீசாதோ..!
என்னவளே....!
இன்பத்தின் எழில்
தவழும் குழந்தையின்
எழிலை சுற்றும்
உலகமும் ரசிக்குமே
விலையில்லா மதிப்பு
உன் அழகை மெருகு
ஊற்றும் கன்னங்கள்
பூச்சூடும் கூந்தல்கள்
வைரமானத் தேகத்தில்
அவள் இதழின்
அழுகுக்கு மதிப்பிட
எவையும் இல்லை “
காலத்திற்கு முன்பே
தோன்றிய
தமிழ் மரபில் வந்த
புலவர்கள் எச்சங்கள்
நாங்களே...!
குளிர்ந்த நின்
உள்ளத்தில் இடம்
தருவாயா உன்
கள்வனுக்கு
மனத்தைத் திருடிய
பைங்கிளியே...!
ஆலப்புழா மலரின் சாரல்
(மலையாளக் கவிதை)
காதலின் இன்பம்
கண்ட எனக்கு
பவளமேனி கிடத்துண்டு
நிண்ட நோக்க கணம்
சிநேகித்தில்
முழ்கினேன்
இவட நோக்கி
கண்களை நோக்கி
சிநேகிதம் பரைவாயோ
பெண்குட்டியே....!
காதலின் இன்பம்
கண்ட எனக்கு
பவளமேனி கிடத்துண்டு
நிண்ட நோக்க கணம்
சிநேகித்தில்
முழ்கினேன்
இவட நோக்கி
கண்களை நோக்கி
சிநேகிதம் பரைவாயோ
பெண்குட்டியே....!
கவிதை வரிகள் பொழிலில்
தண்பெயல் பொழிந்த
ஞாலத்தில்
தமிழ் மரபில் தோன்றிய
கவிஞர் நானே....!!
மகரந்தம் செறிந்த பூக்களும்
இந்த கவிஞன் கவிதை
வரிகளும் மயங்கதோ....!
பிடித்த வரிகள்:
இளந்தமிழே இழிந்தச் தமிழ்ப்பால்
சுவைத்து வளர்ந்த புலவரின் எழில்
மகவே….!
எந்தன் நெஞ்சில் ஓடிய ஆறு
வழித் தெரியாமல் இளங்கன்னிடம்
முழுகிறதே…!
மலரின் இதழ்களில் மகரயாழ்
இசை கலந்து தமிழில்
கலைகிற்தே……!
வாழாதத் தருணம்
சிறகடித்து பறந்த தமிழ்க்
கொடியைக் கூட்டிலிருக்கும்
பறவைப் போல்
நான்குச் சுற்றில் இருக்கும்
மனிதனானேன் நானே....!
தமிழ்ப்பாவை
தித்திக்கும் தமிழ்த்தேன்
செந்தமிழின்
கண்டப் புலமையே...!
யாழ் இசைகள்
போன்றதொரு
குரல் வலிமையைக்
கொண்டவரே
இனிமையே....!
தாமரைக் கன்னி சில்காற்றை
தண்சோலையில் மலர்ந்த காதல் பூவே
மேகங்கள் சுழுளும் தமிழ்க் கன்னியே
வாழ்க்கை அறங்கள் செழிக்க வந்தவளே
புன்னகை என்னும் கவியைத் வந்தவளே.....!
முப்பால் கலந்த இதயத்தில்
மலர்ந்தக் கனியே......!
யாழ் இசைகள் போன்றதொரு
குரல் வளமை மிகுந்த
பெண்ணே....!
இறுதி மூச்சு உள்ளவரைத்
இந்தக் கவிஞன் கவிதை
வரிகள் உனக்கு சமர்பனம்...!
பொழிந்த மயில்
வறண்ட நிலத்தில் பொழியுக்
குளிர்கால மழைக்
கண்ணிமைக்குள்
வீசிட…..!
தெங்கு மரத்தின்
இளந்தென்றலில்
மெல்லிசை தேகத்தில்
நினைந்திட….!
குயில் பாட்டு வரிகள்
காதில் வந்து
பாய்ந்திட ....!
ஆறுகள் இல்லா நிலையிலும்
அவள் பாதம் பட்ட
புன்செய் நிலம் எங்கும்
செழிக்கிறதே…..!
கற்புக்கு செங்கோல் நீயானாய்
தலைவன் மனத்தில் குடிருந்தாய்
வாழ்வு எல்லாம் உந்தன் நினைவு
கண் விழித்தால் உந்தன் தோற்றம்
எந்தன் ரசனை உள்ளம் ஏங்கியது
நின்னால்.....!
அவள் அகன்ற விழிகளில்
வானவில் மலரும் பூமியில்
நடக்கும் பாதையில்
எல்லாம் முத்துக்கள் பிறக்கும்
காலெல்லாம் சந்தன
வாசம் வீசும்....!
கன்னித்தமிழ் மொழியே
கன்னித்தமிழ் இனத்தில்
வளர்ந்த
முத்திக்கனியே…..!
வட்டமிடும் பட்டாம்பூச்சியும்
நின் கால் பாதத்தில்
மாயாதோ……!
தகவல் பகலில் இருந்த
செம்மொழி வரிகள்
எந்தக் கல்வெட்டாய்
மலராதோ…..!
என் சித்தத்தில் கலந்து
உயிராய் மலராதே….!
தமிழின் காதல் நினைவுகள்
அல்லி மலரின் நறுமணத்தை
அள்ளிக் கொண்டுப்
பிறந்தவளே…..!
குயிலோசையில் தமிழ் மொழினைக்
கொண்டுப் பிறந்தவளே……!
காதல் நினைவுகள்
என்னை வருந்திட
மாலையில் பூக்கும்
தாவரங்களில்
தேம்பிழி வழிந்திட….!
புகழ் பொங்கும் தமிழைப்
பற்றற்றுக் கிடந்து
மலையுச்சியில் சிகரமாய்
நிற்க ஓங்கி வளர்த்தனர்
தமிழர்கள் மாண்புச் சிறக்க.....!
இயற்கையின் சொர்க்கம்
நமது இனத்தின் மொழித்
தாக்கம் அதிகம்
மலராதோ....!
கவிஞ்சோலைகளில்
மலர்ந்திடும் கண்ணே
அவள் தேகத்தில்
மலர்ந்திட....!
தேனாறுப் பாயும்
இடமெல்லாம்
காதலின் காஞ்சியும்
மலராதே....!
எங்கள் குலத்தின் முதல் இளவவரசன்
கவின்:
எந்தன் இளவரசன்
சோழத் தேசத்தின் இளவரசனே..!
திருவாதிரை நட்சத்திரத்தில்
பிறந்தவனே…!
முத்தரிப் பதிந்த பவளமேனியே
அன்பு உள்ளே: பாசத்தின்
அடையாளமே….!
மதியின் ஊற்றே:புகழின் நீட்சியே
தமிழ்நாட்டிற்கு கிடைத்த அறியா
பொக்கிஷமே...!
வாழ்க:வான் ஓங்க :வையம் ஆளுக :
கலைமகனே....!
மற்றவரின் உள்ளத்தை
ஈர்க்கும் கள்வன் நீ
அல்லவா...!
மகனே..!
அலைகள் எப்போழுதும்
ஓய்வதில்லை……..!
அதே
போல் கதிரவனின் கவிதை
வரிசைகளும் ஓய்வதில்லை....!
எனது உயிர் மூச்சு நின்றாலும்
எந்தன் இதயம் அவள்
பெயரைச் சொல்லி கொண்டே
மாயும்.....!
கடைசிக் கணம் வரை....!
By Kathiravan.R



Comments